விமானம் தீப்பற்றிய போது விரைந்து செயற்பட்ட ஊழியர்கள்..!
கனடாவில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது தீபற்றியுள்ளது.
கனடாவின் ஹாலிபேக்ஸ் விமான நிலையத்தில் எயார் கனடா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 80 பயணிகளுடன் தரையிறங்கியது. இதன் போது லேண்டிங் கியரில் பழுது ஏற்பட்டது.இதன் காரணமாக இறக்கை பகுதி ஓடுபாதையில உரசி விமானத்தில் திடிரென தீப்பிடித்தது.
விமானத்தில் தீப்பற்றியதை கண்ட மக்கள் பயத்தில் கத்தினர்.இதனையடுத்து விரைந்து செயற்பட்ட விமான ஊழியர்கள் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.இதன் காரணமாக அதிஷ்டவசமாக 80 பிரயாணிகளும் உயிர் தப்பினர்.