பேருந்தை இலக்கு வைத்து கண்ணி வெடி தாக்குதல்..!
நேற்றைய தினம் பாகிஸ்தானின் டரபெட் நகரில் கண்ணிவெடி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வில் பங்கெடுப்பதற்காக 36 பேர் ஒரு பேருந்தில் பயணித்த வேளை ,குறித்த பேருந்தினை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.இந்த பேருந்து பயணத்தின் போது பலூசிஸ்தானை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரி மற்றும் அவரின் குடும்பத்தாரும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலின் போது 4 பேர் உயிரிழந்துடன் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதனையடுத்து காயமடைந்தவர்கள் வைத்தியசாலகளில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த தாக்குதல தொடர்பான விசாரனைகளை பாகிஸ்தான் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.