ஈகுவடாரில் ஊரடங்கு சட்டம் அமுல்..!
ஈகுவடாரில் இராணுவ அவசர நிலை மற்றும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குவாயஸ்,லாஸ் ரியோஸ்,மனாபி உள்ளிட்ட 7 மாகாணங்களில் உள் நாட்டு கலவரம் நீடித்துள்ளதால் இராணுவ அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதே வேளை மேலும் 20 மாகாணங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் ஜனாதிபதி மாளிகையை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.