போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வரமறுத்தால் அதிக தடைகள் விதிப்போம்-டொனால்ட் ட்ரம்..!
உக்ரைன் ரஷ்ய போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி வர மறுத்தால் ரஷ்யா மீது மேலும் கூடுதல் தடைகள் விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி யுடன் பேசி வருகிறோம்.புடினுடனும் பேசவுள்ளோம்.ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன் உடனான போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்தைக்கு வர மறுத்துவிட்டால் ரஷ்யா மீது கூடுதலான தடைகள் விதிக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.
3 வருடங்களுக்கு மேலாக ரஷ்ய உக்ரைன் போரானது நடைப்பெற்று வருகிறது.இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் .பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.சர்வதேச ரீதியில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.