வெற்றிகரமாக நிறைவு பெற்ற மாணவர்களுக்கான நிகழ்வு..!
J.M.J media வின் அனுசரணையுடன் நடந்த மாணவர்களுக்கான விஷேட நிகழ்ச்சி

J.M.J media ஆனது சமூகத்திற்கு தேவையான பல விடயங்களை J.M.J media இன் பணிப்பாளர் ஜஸூரா ஜலீலின் தலைமையின் கீழ் நடத்தி வருகின்ற நிலைமையில் இம்முறை
JMJ மீடியாவின் அனுசரணையுடன் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் JMJ மீடியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் ஹிக்மத் இலவசக் கல்வி மையத்தின் ஸ்தாபகருமான முனாஸ் ஜமால்தீனின் ஏற்பாட்டில் தி/கிண்ணியா அல் – அதான் மகா வித்தியாலயத்தில் 2025.02.07ஆம் திகதி மாணவர்களுக்கான ஊக்குவித்தல் நிகழ்ச்சியும் போதைப்பொருள் தடுப்பு , சுயதொழில் மற்றும் திறன்களை வளர்த்தல் பற்றிய நிகழ்வு வெகுசிறப்பாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்த
கவி மலர் பைந்தமிழ்ச் சங்கத்தின் தலைவி ரித்து சூர்யா, நேத்ரா தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்ரீநாகவாணி ராஜா, நீர்கொழும்பைச் சேர்ந்த நிஸ்வத் நிஸ்பர்(பண்முக ஆர்வளர்) மற்றும் கிண்ணியாவைச் சேர்ந்த கவிதாயினி ஆசிரியர் முகைமீனா மூசா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அத்தோடு தி/ இக்ரா வித்தியாலயம் மற்றும் ஹிக்மத் இலவசக் கல்வி மையம் சென்று மாணவர்களின் வளர்ச்சிக்கான அறிவுரைகளும் வழங்கி வைக்கப்பட்டது.