சர்வதேச நீதிமன்றத்தின் மீது தடைகளை விதிக்கும் உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கை எழுத்திட்டுள்ளார்..!
இஸ்ரேல் மீதான சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணையையும் பிடியாணையையும் அமெரிக்கா நிராகரித்துள்ளது.
இஸ்ரேல் மீதான விசாரணைகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் மீது தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த கை எழுத்தினை யிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தினம் இஸ்ரேல் இடையிலான போரின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்ததாகவும் ,இந்த குற்றத்தில் இஸ்ரேல் பிரதம் நெதன் யாகு,முன்னாள் பாதுகாப்பு மந்திரி யோவ் கெலண்ட் ஹமாஸ் அமைப்பின் இராணுவ தளபதி முஹமது டெய்ப் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இவர்களுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது