அலஸ்கா கடல் பனியில் வீழ்ந்து நொருங்கிய விமானம்..!
அலஸ்கா மாகாணத்தின் உனலக்ளீட் விமான நிலையத்திலிருந்து நோம் நகருக்கு புறப்பட்ட விமானம் காணாமல் போன நிலையில் அலஸ்கா கடல் பனியில் வீழ்ந்து நொருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில்10 பேர் பயணித்துள்ள நிலையில் அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

நோர்தன் சவுணட் அருகே உள்ள மலைப்பகுதியில் சென்ற போது அதிக பனிப்பொழிவு காரணமாக விமானத்தை இயக்குவதில் விமானிக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில் ,கட்டுப்பாட்டறையுடன் தொடர்பு கொள்ள விமான முயன்றுள்ளார்.எனினும் அதற்குள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்துள்ளது.இறுதியாக சிக்கனல் கிடைத்த இடத்தில் ஹெலிகொப்டர் மூலம் சென்று தேடுதல் நடத்தப்பட்ட நிலையில் அலஸ்கா கடல்பனி யில் வீழ்ந்து நொருங்கியிருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர்.