அன்பின் அன்பு..!
அன்பு
உலகமே மண்டியிடுகிறது அன்புக்காக !
தாயின் கருவறையில்
குழந்தை அம்மாவின் முகம் தெரியாமலே அன்பாய் புன்னகைக்கிறது
தாயின் கருவறையில் வீரிட்டு கீழே விழும் குழந்தை!
அப்பாவின் அன்பு
தகப்பன் தன் தோளில் சுமந்த அன்பு தகப்பனை தன் தோளில்
சுமக்கும் போது தெரிகிறது .
தாயின் கருவறை அன்பு
அவள் நம்மை விட்டு காணாமல் போகும் போது தெரிகிறது!
சகோதர
சகோதரியின்
அன்பு நாம் ஆளில்லாமல் தனியே தவிக்கும் போது தெரிகிறது!
குழந்தைகளின் அன்பு அவர்கள்
திருமணம் ஆன பின் தெரிகிறது!
நாம் எல்லாரிடமும் வைக்கும் அன்பு
நாம் மறைந்த பிறகு தான் தெரிகிறது
நம்மைச் சுற்றியுள்ள உறவுகளுக்கு!!
இரம்ஜான் எபியா சென்னை