மனதை கவர்ந்த “Talent show”
ஜே.எம்.ஜே மீடியாவின் “Talent Show” போட்டி நிகழ்ச்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
சமூகத்திற்கு தேவையான பல விடயங்களை முன்னெடுத்து வருவதில் ஐே.எம்.ஜே மீடியாவின் செயற்பாடு தனித்துவமென்பது பலர் அறிந்த விடயம். அந்த வகையில் ஜனவரி மாதம் ஆரம்பம் முதல் இறுதி வரை சர்வதேச ரீதியில் இலை மறை காயாக இருக்கும் திறமையானவர்களின் பல்துறை திறன்ளை உலகறியச் செய்ய வேண்டும். என்ற நோக்கத்தில் J.M.J media அனுசரணையுடன் ஆக்கத்திறன் போட்டி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.



அந்த நிகழ்வுக்கான சான்றிதழ்கள் இன்று J.M.J media வினால் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வு J.M.J media வின் நிறுவன பணிப்பாளர் ஜஸூரா ஜலீலின் தலைமையின் கீழ் வெகு விமர்சையாக நடைபெற்றதுடன் இவ்வமைப்பில் சர்வதேச ரீதியாக இணைந்துள்ள அனைத்து ஒருங்கிணைப்பாளர்கள் மூலமும் நடத்தப்பட்டதென்பது குறிப்பிடதக்கது. அந்தவகையில்
இந்நிகழ்வில் உலக நாடுகளில் உள்ள பலரும் வயது வித்தியாசம் இன்றி கலந்து கொண்டதே இந்த நிகழ்வின் வெற்றியாகும்.
கோலம் போடுதல், வரைதல், பாடுதல், ஆடுதல், கைவண்ணங்களை செய்தல் என்று ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமைகளும் பல்வேறு வகையில் வெளிக்காட்டி இருந்தனர். இப்போட்டியில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தங்களின் திறமைகளை இவ்வாறு உலகறியச் செய்ய முன் வந்த ஜே.எம்.ஜே மீடியாவுக்கு நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து இவ்வாறான பல திட்டங்களை எதிர்கால சமூக நலன்கருதி தமது J.M.J மீடியா அமைப்பு செய்யவுள்ளதென்பதை அதன் ஸ்தாபகர் எமக்கு தெரிவித்தார்.
ஆக்கம் A.K.இளங்கோ