தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி தினம் – விசேட ஏற்பாடுகள்
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் வரும் மாசிமாத சிவராத்திரியை மிகச்சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த அடிப்படையில் ஆலயத்தில் சிவலிங்கத்திற்கான அபிஷேகம் காலை முதல் நள்ளிரவு வரை இடம்பெற உள்ளது.

அத்தோடு விசேடமாக அன்றைய நாள் பக்தர்கள் கைகளினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சித்தர்களால் ஆலயத்திற்கு தருவிக்கப்பட்ட உயிர்லிங்கத்துக்கு பக்தர்கள் கைகளினால் ஆலயத்தின் புனித கங்கையான பாலாறு பால புஷ்கரனிலிருந்து தீர்த்த நீர் எடுத்து வந்தும் உங்களது ராசிக்கு ஏற்ற வகையிலும் அபிஷேகம் செய்யமுடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மாசிமாத சிவராத்திரி , சைவ சமயத்தவர்களால் விசேடமாக அனுஷ்டிக்கப்படும் வகையில் இந்த விசேட ஏற்பாடு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.