பதிவுகள்

இந்த ஆண்டு 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்கு மற்8றும் தெற்கு மாகாணங்கள் அதிக குற்றங்கள் நிகழும் மாகாணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த மாகாணங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவத்துள்ளார்.

நாட்டில் 57 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களும், அவற்றுக்கு சுமார் 1,400 பேர் உதவியாளர்களாக செயற்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தப்பட்ட விசாரணைகளில், 13, T56 ரக துப்பாக்கிகள், 15 ரிவால்வர்கள், 21 கைத்துப்பாக்கிகள், 75, 12-போர் துப்பாக்கிகள், 7 ரிப்பீட்டர்கள், 805 உள்ளூர் துப்பாக்கிகள் மற்றும் பிற துப்பாக்கிகள் நான்கும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *