பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத விசேட வழிபாடுகள்!!

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை கிராமத்திலே அமர்ந்து அருள்புரியும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரதத்தன்று 26/02/2025 புதன்கிழமை விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 26/02/2025 புதன்கிழமை மஹா சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு நான்கு சாமப்பூஜை வழிபாடுகள் மற்றும் அதனை சிறப்பிக்கும் வகையில் ஆலயத்தில் வருடந்தோறும் சைவ சமயம் சார்ந்த கலை கலாசார நிகழ்வுகள் நடாத்துவது வழமை.. அதே போன்று இந்த வருடம் 2025 ஆம் ஆண்டும் ஆலயத்தில் 26/02/2025 புதன்கிழமை மஹா சிவராத்திரி தினத்தன்று பிரம்மாண்டமான அரங்கிலே வெகுவிமர்சையாக சைவ சமயம் சார்ந்த கலை கலாசார நிகழ்வுகள் நடாத்த தீர்மானித்துள்ளனர்.
26/02/2025 புதன்கிழமை மஹா சிவராத்திரி தினத்தன்று முதலாம் சாமப் பூஜை வழிபாடுகள் சரியாக மாலை 5 மணியளவில் ஆரம்பமாகும் என்பதனை சகல விரதம் அனுஷஂடிக்கும் விரதகாரர்களுக்கும் அறியத்தருகின்றனர்.
எனவே கிழக்கிலங்கை வாழ் சகல பக்த அடியவர்களையும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றனர் ஆலய நிருவாக சபையினர்.