மட்டக்களப்பு ஸ்ரீ காயத்ரி பீடம், சப்தரிஷிவளாக ஆலய மகா சிவராத்திரி விழாவும் புண்ணிய தீர்த்த அபிடேகமும்!!

மட்டக்களப்பு புது முகத்துவாரம் ஸ்ரீ காயத்ரி பீடம், சப்தரிஷிவளாக ஆலய மகா சிவராத்திரி விழாவும் புண்ணிய தீர்த்த அபிடேகமும் திருவாசக முற்றோதலும் நாளை 26.02.2025ஆம் திகதி காலை 6.00 மணி தொடக்கம் ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் புதன் கிழமை அதிகாலை 5.30 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை சமுத்திர தீர்த்தம் அடியார்களது கரங்களால் எடுத்துவரப்பட்டு சுவாமிக்கும் சிவலிங்கத்திற்கும் தங்களது திருக்கரங்களால் அபிஷேகம் செய்யப்பட்டுபவதுடன்
காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை திருவாசமுற்றோதல் மட்டக்களப்பு சைவத் திருநெறி மன்றத்தினரால் நடாத்தப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பி.ப 7 மணி தொடக்கம் 8.30 மணி வரை முதலாம் சாம பூஜை உபயகாரர்களான மட்டக்களப்பு கல்லடி நீர்ப்பாசன திணைக்களம் [மத்தி] உத்தியோகத்தர்களினால் நடாத்தப்படவுள்ளது.முதலாம் சாம பூஜை முடிவடைந்ததும், ஐயப்பன் சுவாமி பக்தர்களால் பஜனை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து சிவயோகச் செல்வர் த. சாம்பசிவ சிவாச்சாரியரினால் சிவராத்திரியின் மகிமை பற்றி ஆன்மீக உரை இடம்பெற உள்ளது. காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் சாம பூசைகள் காயத்ரி குடும்பத்தினர்களால் நடாத்தப்படவுள்ளது.அத்தோடு இரண்டாம் சாம பூஜை முடிவடைந்த பின்னர் மகா யாகம் காயத்ரி குடும்பத்தினர்களால் இரவு 12 மணி வரை நடைபெறவுள்ளது