குளவி கொட்டுக்கு இலக்காகி 9 மாணவர்கள் பாதிப்பு

கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட தொழுவ குருக்கலையிலுள்ள தி.மு. ஜயரத்ன ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 9 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
149 மாணவர்கள் கல்வி பயிலும் மேற்படி பாடசாலையில் இன்று மதியநேர இடைவேளையின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டு சம்பவத்தையடுத்து பாடசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாடசாலை மைதானத்துக்கு அருகிலுள்ள மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிகூடே இவ்வாறு கலைந்துள்ளது.