பொலிஸாரின் சம்பள உயர்வு தொடர்பான தகவல்

அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பளக் கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (28) நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் இந்த முயற்சிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கோ அல்லது அரச உத்தியோகத்தர்களுக்கோ சம்பளக் குறைப்பு எதுவும் விதிக்கப்படவில்லை.

பல வருடங்களின் பின்னர் அவர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது பொலிஸ் கான்ஸ்டபிளின் அடிப்படை சம்பளம் 29,540 ரூபாவாக உள்ளது, இது இந்த ஆண்டு 44,293 ரூபாவாக உயர்த்தப்படும் என்றார்.

பதவிகளுக்கான கூடுதல் சம்பள உயர்வுகள் பின்வருமாறு:

பொலிஸ் கான்ஸ்டபிள்: ரூ. 6,182 அதிகரிப்பு
பொலிஸ் சார்ஜென்ட்: ரூ. 6,441.54 அதிகரிப்பு
உதவி பொலிஸ் ஆய்வாளர் (SI): ரூ 6,551.72 அதிகரிப்பு
பொலிஸ் ஆய்வாளர் (IP): ரூ 7,040.24 அதிகரிப்பு
தலைமை ஆய்வாளர் (CI): ரூ 7,655.74 அதிகரிப்பு
பொலிஸ் அத்தியட்சகர் (ASP): ரூ 8,244.11அதிகரிப்பு
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ( (SSP): ரூ 9,925 அதிகரிப்பு
பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (DIG): ரூ 11,118 அதிகரிப்பு
பொலிஸ்மா அதிபர்: ரூ 13,223 அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *