மட்/போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில் நோயாளிகள் உறங்குவதற்கான கட்டில் வசதிகள் இல்லாத குறைபாடுகளை பணிப்பாளர் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா?

மட்/போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில் நோயாளிகள் உறங்குவதற்கான கட்டில் வசதிகள் இல்லாத குறைபாடுகளை பணிப்பாளர் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா?
மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில் சில தினங்களில் அளவுக்கு அதிகமாக நோயாளிகள் வருகை தருவதனால் சிலர் நிற்பதற்குக் கூட முடியாமல் தரைகளில் இருப்பதையும், கதிரைகளில் இருப்பதையும், சிலர் நிற்பதையும், சிலர் கட்டில்களில் உறங்குவதையும் அவதானிப்பதோடு சிலர் கட்டில் இல்லாமல் இருப்பதென்பது நோயாளிகளை உளவியல் ரிதீயான தாக்கத்திற்கு உள்ளாக்குவதோடு பல சங்கடங்களும் நோயாளிகளுக்கு உருவாகின்றன.
நோயினால் வருகின்றவர்கள் உறங்குவதற்கு கட்டில்கள் இல்லாமல் பராமரிப்பதென்பது மிகமிக சங்கடமான விடயமே. இந்த சூழல் என்பது விடுதியில் சிறப்பாக கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களுக்கும் சங்கடங்களை ஏற்படுத்துகின்றது.
ஐம்பதிற்கு மேற்பட்ட விடுதிகள் உள்ள நிலையில் பணிப்பாளர் நிருவாகம், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், சிரேஸ்ட தாதிகள், தாதியர்கள் விடுதியில் கடமையாற்றுகின்ற ஏனைய உத்தியோகத்தர்கள் உட்பட இரவு பகலின்றி பலர் சிறப்பாக கடமை புரிகின்ற நிலையில் ஏன் விடுதிகளில் நோயாளிகளுக்கு கட்டில்கள் இல்லாத நிலை ஏற்படுகின்றன. இதிலுள்ள பிரச்சினைகள் என்ன?
இதேவேளை சில தினங்களில் சில விடுதிகள் வெறிச்சோடி கிடப்பதையும், குறைவான நோயாளர்களுடன் இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
பணிப்பாளர் அவர்கள் விரைவாக வைத்திய நிபுணர்கள் ஊடாக இவ் விடயங்களுக்கு தீர்வு காண்பது ஊடாக சிறப்பான சேவைகளை நோயாளிகளுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்ளுமென இரா.துரைரெத்தினம், மு.மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப், மட்டக்களப்பு தெரிவித்துள்ளார்.