27 குடும்பங்கள் புதிய கிராம சேவையாளர் பிரிவுடன் இணைப்பு

27 குடும்பங்கள் புதிய கிராம சேவையாளர் பிரிவுடன் இணைப்பு ஹிஸ்புல்லாஹ் எம்பி உடனடி நடவடிக்கை
மண்னைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள பூர்வீகக்கிராமமான காங்கேயனோடை 155B தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் பல தசாப்தங்களாக வசித்து வந்த சுமார் 27 குடும்பங்களை எவ்வித அறிவித்தலுமின்றி அருகிலுள்ள புதிய கிராம சேவையாளர் பிரிவுடன் இணைக்கின்ற நடவடிக்கையை நிறுத்தக்கோரி கடந்த வாரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் அனைவருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் கையொப்பத்தோடு மனு வாரம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், இன்றைய தினம் (1) மாவட்ட அரசாங்க அதிபரை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஏற்பாட்டில் நேரடியாக சென்று சந்தித்து நிலைமைகளை தெளிவு படுத்தியதோடு இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய கடிதத்தலைப்பில் அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட்ட கடிதத்தினையும் வழங்கி பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் விடயங்களை முன்வைத்தார்.
இவ்விடயம் தொடர்பில் விரைவாக ஆராய்ந்து பதில் அளிப்பதாக அரசாங்க அதிபர் இதன்போது உறுதியளித்தார்.
