ஜப்பான் ‘ASAHI’ கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

Destroyer வகைக்குச் சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பலானது 151 மீற்றர் நீளம் கொண்டது. மொத்தம் 202 அங்கத்தவர்களை கொண்ட இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் SHOTA TAKASHIRO பணியாற்றுகிறார்.

மேலும், இந்த போர் கப்பலானது இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துக் குழுவினர்கள் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளனர்.

இக்கப்பலானது வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்திசெய்த பின்னர் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி இலங்கையை விட்டு புறப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *