பதிவுகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (04) நண்பகல் 12:00 மணி முதல் 1.00 மணி வரை அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் “நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், குறிப்பாக கடந்த 9 வருடங்களாக சம்பளம் முரண்பாட்டுப் பிரச்சினை நீடிக்கின்றது இதற்கு எந்த ஒரு அரசும் அதிகாரிகளும் இதுவரை தீர்வு தரவில்லை” என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அரசாங்கம் முன் வைத்துள்ள புதிய வரவு செலவுத் திட்டத்தில் கூட பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுகின்ற கல்விசாரா ஊர்களுக்கு எந்த விதமான வரப்பிரசாதங்களும் முன்வைக்கப்படவில்லை.

ஆகவே, அரசாங்கம் எமது மேற்படி கோரிக்கைகளையும் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்தி இன்றைய தினம் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் எம். எம். காமில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *