கல்லடி வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்வர் உயிரிழப்பு !

மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் நேற்று(03) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் 10 பேர் கொண்ட குழுவினரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது வாழைச்சேனையை சேர்ந்த டிலோஜன் 33 வயதுடைய ஒருவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தள்ளார்.

