விவசாயசெய்கை அழிவடைவதற்கும், யானைகளின் அழிவிற்கும் வனஜீவராசிகள் அமைச்சும், அத் திணைக்களமுமே பொறுப்பு இரா.துரைரெத்தினம்

மக்களின் அழிவிற்கும், விவசாயசெய்கை அழிவடைவதற்கும், யானைகளின் அழிவிற்கும் வனஜீவராசிகள் அமைச்சும், அத் திணைக்களமுமே பொறுப்புக் கூற வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ம்ஆண்டு தொடக்கம் பல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காட்டுப் பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட யானைகள் பல சம்பவங்களினால் மரணமடைகின்றன.
குறிப்பாக. மின்சாரத்தினால் தாக்கப்பட்டு மரணம், சுடுபட்டு மரணம், நஞ்சு வைத்து மரணம், நோயினால் மரணம், பல கிடங்குகளில் விழுந்து மரணம் புகையிரத்தில் அடிபட்டு இப்படி பல மரணங்கள் காட்டு யானைகளுக்கு ஏற்படுகின்றன.
கடந்த வாரம் கூட வெலிக்கந்த,பொலனறுவை பகுதிகளில் புகையிரதத்தில் மோதுண்டு ஒரே தடவையில் ஆறு யானைகள் மரணமடைந்துள்ளன. சில தினங்களுக்கு முன்பும் ஒரிரு யானைகள் புகையிரதத்தில் மோதுண்டு மரணமடைந்துள்ளன. இதேபோன்று சம்பவங்கள் தெடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இதேவேளை ஒவ்வொரு நாளும் இரவுபகலின்றி காட்டு யானைகள் மக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதும், பயன்தரும் மரங்களை அழிப்பதும், குடியிருப்பு வீடுகளை உடைப்பதும், விவசாயச் செய்கைகளை சேதப்படுத்துவதும் இன்று இரவு கூட நகரப்புறத்திலுள்ள புதுநகர் விமான நிலையத்துக்குள் ஆறுக்கு மேற்பட்ட காட்டு யானைகள் உள் நுழைந்து புதுநகர்,வலையறவு,திருப்பெருந்துறை கிராம மக்களும் விமானநிலைய உத்தியோகத்தர்களும் விரட்டாத பட்சத்தில் நகரப்புறத்திற்கு கூட உட்புகுந்திருக்கும்.
எனவே வனஜீவராசிகள் திணைக்களம் யானைகளை பராமரித்தால் மட்டுமே இவ் விபத்துக்களில் இருந்து யானைகளை காப்பாற்ற முடியும். யானைகள் தொடர்பாக பாரிய திட்டத்தை தீட்டி அமுல்படுத்தினால் மட்டுமே மக்கள் அழிவடைவதையும், வேளாண்மை செய்கை பாதிப்படைவதையும், யானைகள் பல சம்பவங்களால் மரணிப்பதையும் நிறுத்த முடியும். இதற்கான முழுப் பொறுப்பும் அமைச்சும் அத் திணைக்களமுமே பொறுப்புக் கூற வேண்டும்.
புதிய அரசு கூட ஏனோதானோ என நடந்து கொள்கின்றது. மாவட்டத்திற்கு தங்களது அமைச்சு திணைக்களத்தின் பலத்தை அதிகரிக்காமல் வேடிக்கை பார்ப்பது ஆரோக்கியமான விடயமல்ல
உடனடியாக பலமான திட்டத்தை தீட்டி காட்டு யானைகள் மக்களுக்கு உயிராபத்தை விளைவிப்பதையும், வேளாண்மைச் செய்கைகளை சேதப்படுத்துவதையும் தடுத்து நிறுத்த அமைச்சும் திணைக்களமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இரா.துரைரெத்தினம், மு.மாகாணசபை, சிரேஸ்டஉறுப்பினர், (ஈ.பி.ஆர்.எல்.எப், மட்டக்களப்பு) வேண்டுகோள் விடுத்துள்ளார்.