பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம்.
பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

புதன்கிழமை (6) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டிருந்தது.இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன் இன்று (06) வியாழக்கிழமை அம்பாறை தடவியல் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடவியல் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இன் போது கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கரைப்பற்று அலிக்கம்பை பகுதியில் ஏரப்பன் ராமன் (69 வயது) என்பவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்துள்ளவர் என காணாமல் சென்ற தங்கள் உறவினர் என சம்பவ இடத்திற்கு சென்றவர்கள் அடையாளம் காட்டினர்.இம்மரணம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *