இ 8 விசாவுக்கு அமைச்சரவை அனுமதி

கொரியாவின் இ 8 விசாவுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இ 8 விசாவினூடாக முதலாவது குழுவை சாதாரண கட்டணத்தின் அடிப்படையில் குறுகிய காலத்தில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் கொரியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று வெளிநாட் டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித் துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று முன்தினம் (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே பிரதி அமைச்சர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கொரியாவின் இ 8 விசாவுக்கு அமைச் சரவை அனுமதி கிடைத்துள்ளது. இ 8 விசா தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத் திட்டுள்ளதாக பரப்பப்பட்டுவரும் போலி தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இடைத்தரகர்களினூடாக பண கொடுக்கல் வாங்கல்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் இனிமேல் இடம்பெறாது.
மிகவும் சாதாரண தொகையின் அடிப்படையில் மிகக் குறுகிய காலப்பகுதியில் இ 8 விசாவினூடாக முதலாவது குழுவை அரசாங்கத்தின் தலையீட்டுடன் கொரியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்போம்.
மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக தொடர்புபட்டு தீர்வை பெற்றுக்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேபோன்று, துறைசார் முயற்சிகளுக்காக நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை ஏற்கவும் தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.