பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளராக மதனவாசன் நியமனம்

மொட்டுக் கட்சியின் கிளிநொச்சி பிரதம அமைப்பாளராக மதனவாசன் நியமனம்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி நிர்வாக மாவட்ட பிரதம அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தவிசாளருமான ப. மதனவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை மொட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.