நள்ளிரவில் பொதுமக்கள் நடமாடவேண்டாம் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

புனித ரமழான் நோன்பு காலத்தில் திருட்டுகள் அதிகமாகலாம். எனவே நள்ளிரவில் நடமாட்டத்தை பொதுமக்கள் முடிந்தளவு தவிருங்கள் என காரைதீவு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
காரைதீவு மாவடிப்படியில் செவ்வாய்க்கிழமை (04) இரவு இரு வீட்டுக்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையிலேயே பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
நோன்பு காலம் என்பதால் வீடுகளின் உரிமையாளர்கள் தராவீஹ் தொழுதுவிட்டு 12 இரவு மணியளவில் வந்து உறங்கிக் கொண்டிருந்த போதே குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
திருடு போன நகைகளை மீட்டெடுக்கும் விசாரணைகள் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். எஸ். ஜெகத் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது
அதனைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு மேல் நடமாட்டம் செய்யும் நபர்களை உடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் என பொலிஸார், அறிவுறுத்தல் விடுத்துள்ளதுடன் இதற்காக இரவு நேரங்களில் பொலிஸ் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு நடமாடும் விழிப்புக்குழு செயற்படுவதாகவும் கூறப்படுகிறது.