வெடித்து சிதறிய ரொக்கெட்..!
எலான் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான “ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி” ரொக்கெட் விண்ணில வெடித்து சிதறியுள்ளது.
இதன் 8 வது சோதனை முயற்சி அமெரிக்காவின் டெக்டாஸ் மாகாணத்திலுள்ள ஏவுதளத்தில் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் விண்ணில் வெடித்து சிதறியது.தெற்கு புளோரிடா மற்றும் பஹாமஸ் பகுதியின் வான் பரப்பில் அதிக வெளிச்சத்துடன் குறித்த ரொக்கெட்டின் பாகங்கள் தென்பட்டன.

எலான் மாஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் பல ரொக்கெட்டுக்களை விண்ணில் செலுத்தி ஆய்வு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.