பெண் எனும் பேரதிசயம்..!
பெண்என்னும் பேரதிசயம்
“”””””””””””””””””””””””””””””
மகளீர் தின விழா
விழி நீர் தெளித்து
கோலமிட்டு வரவேற்கும்
மகளிர்
வலையொலிகளுக்கு இன்று மட்டும் வாழ்த்தொலிகள் நாளை முதல் வசை மொழிகள்…….
சத்தியமாய் புரியவில்லை தீர்ந்துபோன உறவுக்கு திதி கொடுப்பதாக தெரிகிறது
உயிர் கொடுத்த உறவென்று உணராமல் உடன் பால் ஊற்றுவதாய் உணர்கிறேன்
இன்று ஒரு நாளைக்கு வந்த அறிவு ஏன் நிதமும் நிலையாக இருப்பதில்லை
நாளை அவர்கள் மகளிர் இல்லையா இல்லை அவர்கள் மகளிர் என்பதை நீங்கள் மறந்து போனீர்களா….
உன்னை வயிற்றில் சுமந்த தாய் ஒரு மகளிர் தான் வாழ்வில் சுமக்கும்
அவளும் மகளிர்….
மகளிர் இனம் என்று நினைக்காதீர்கள்
இனம் என்று நினைத்தால் தான் பேதங்கள் உருவாகின்றன உயிர் என்று நினையுங்கள்……. உணர்வு நிலைக்கும்
அரிதாரத்தை பூசிக்கொண்டு அவ்வப்போது அலங்கரித்துக் கொள்ளும் அவர்களைப் போலவே அவர்களைக் கொண்டாடும் தினமும் ஆண்டுக்கு ஒரு முறை……
பெண்மை என்பது ஒரு காட்சிப் பொருள் அல்ல நீ ஆண்மை என்பதற்கான சாட்சி அருள்
பெண்மை என்பவள் ஒரு பேராண்மை
வர்ணித்து வர்ணித்து வஞ்சியவளை
வஞ்சிக்காதீர்…… புகழ்ந்து புகழ்ந்து அவளை புதைக்காதீர்கள்…..
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
அடக்கம் ஒழுக்கம் என்று அடக்கி அடக்கியே முடங்கிப் போனது
பிள்ளைப்பேறு மட்டுமே தாய்மைக்கு சடங்காய் ஆனது…….
மகளிர் தினத்தன்று மட்டும் வாழ்த்துபவன் மனிதன் அல்ல
மரணத்திற்குப் பின்னும் வாழ்த்துகிறேன் மறுபிறவிக்கும் அவள் மகத்துவம் தேவை…..
மகப்பேறு என்பது மறுபிறவி…….
பெண்ணாய் எடுத்த
ஒரு பிறவி தாய்மையாக மறுவி
மறுபிறவி எடுக்கும் மகத்துவம்
ரத்தத்தை பாலாக்கும் அவள் சத்தத்தை உணருங்கள்…. மற்றவர்கள் உணராவிட்டாலும் பரவாயில்லை பெண்களே நீங்கள் உங்களை உணருங்கள்……
எதிரில் இருப்பவன் உங்களை உணர்கிறானோ இல்லையோ உங்களை நீங்கள் உணருங்கள்
உங்களை நீங்கள் உயர்ந்தால் தான் உயரத்தை எட்ட முடியும்…..

போகப் பிறவி அல்ல நீங்கள் யோக பிறவி… காமத்தீயில் எறியும் யாக குச்சி அல்ல நீங்கள்….. காட்டுத் தீயாக பற்றி எறியும் கற்பு தீ…….
அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் அந்த ஆபத்தை உணர்த்துங்கள்…. நீங்கள் நீங்களாகவே இருங்கள்……
உயிர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள் உங்களையும் உயிர்கள் என்று உணரும் உயிர்களிடம் மட்டும்……
முனைவர் :
தமிழ் ஆர்வலர்
கவித்தேடல்
மு.மொய்தீன்
(வடசென்னை)
8-3-2025-