ஆசிரியர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது .

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்றைய தினம் (07) கிளிநொச்சி பளை, வேம்படிக்கேணி பகுதியிலுள்ள கிணனொற்றிவிருந்தே மீட்க்ப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “சிதம்பரப்பிள்ளை மைல்வாகனம் நபருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் சடலமாக காணப்படும் பெண் அதே பகுதியை சேர்ந்த ஆசிரியையான 54 வயதுடைய தவராசசிங்கம் சரஸ்வதியென அடையாளம் காணப்பட்டுள்ளது.