தற்போது இந்தோனேஷியா அருகே ஒரு வழிமண்டல குழப்ப நிலை தோன்றியுள்ளது.

இது புவிமத்திய ரேகையை அண்மித்து இந்து சமுத்திரத்தில் காணப்படும் MJO தாழ்வு அலையின் செல்வாக்கினால் மேலும் விருத்தியடைந்து, ஒரு அகன்ற காற்று சுழற்சியாகி வடக்கு வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி மிக விரைவாக நகரக்கூடும் என எதிர்வுகூறப்படுகிறது.
இதன் விளைவாக வருகின்ற திங்கள், செவ்வாய் தினங்களில் (மார்ச் 10,11) வடக்கு கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று வடக்கே யாழ்ப்பாணம் வரை வெப்ப நீராவியை எடுத்துவரும் கிழக்கு காற்றலை உள்நுழையும் என்பதால், தற்போது வடக்கு மாகாணத்தில் காணப்படும் குளிர்ந்த பனிப்பொழிவையும் தன்னகத்தே ஈர்த்துக்கொண்டு ஓரிரு மணிநேரம் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன.
ஆகவே, இவற்றை கருத்தில் கொண்டு வடக்கு கிழக்கு விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை திட்டமிடுதல் பாதுகாப்பாக அமையும்.!!
08.03.2025 – 05.00PM
