சிவனொளிபாதமலை யாத்திரைக்காக விசேட ரயில் சேவை

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரைக்காக விசேட ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறை வரை இந்த விசேட ரயில் சேவையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில் அட்டவணை பின்வருமாறு,
கொழும்பு கோட்டை – பதுளை நோக்கி…
விசேட ரயில் 01 (கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை)
மார்ச் 12, 14, 16, 21, 23, 28, மற்றும் 31 ஆகிய திகதிகளில் இயக்கப்படுகிறது.
விசேட ரயில் 02 (பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை)
மார்ச் 12, 14, 16, 21, 23, 28, மற்றும் 31 ஆகிய திகதிகளில் இயக்கப்படுகிறது.
பதுளையிலிருந்து மாலை 5:20 மணிக்கு புறப்படும்.
கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை நோக்கி…
விசேட ரயில் 03 (கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை)
மார்ச் 13 முதல் மார்ச் 31 வரை தினமும் இயக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5:30 மணிக்கு புறப்படும்
விசேட ரயில் 04 (காங்கேசன்துறை முதல் கொழும்பு கோட்டை வரை)
மார்ச் 13 முதல் மார்ச் 31 வரை தினமும் இயக்கப்படுகிறது
புறப்படும் இடம்: காங்கேசன்துறையில் பிற்பகல் 1:50 மணிக்கு