பதிவுகள்

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிக்க விண்ணப்பம் கோரல்

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு உறுப்பினர் ஒருவரின் நியமனத்திற்கான விதப்புரையை மேற்கொள்வதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

விண்ணப்பங்கள் www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்படல் வேண்டும்.

உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2025 ஏப்ரில் 01 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் பின்வரும் முகவரிக்கு அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இணைப்பு: https://www.parliament.lk/ta/secretariat/advertisements/view/329

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *