டோர்காம் எல்லை திறப்பு..!
டோர்காம் எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளையும் கடக்கும் முக்கிய வழிதடம் இதுவாகும்.
இந்த பகுதியில் ஆப்கானிஸ்தான் இராணுவமானது சோதனை சாவடி அமைக்க முயன்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பாகிஸ்தான்.இதனையடுத்து இந்த எல்லையை பாகிஸ்தான் மூடியது.இதனையடுத்து இரு நாட்டு இராணுவத்திற்கிடையில் மோதல் நிலைமை துவங்கியது. இதன் போது ஆப்கானிஸ்தானின் ஒரு இராணுவ வீரர் உயிரிழந்தார்.இதனால் பெரும் பதற்றமான சூழல் உருவாகியது.

இதனையடுத்து இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் டோர்காம் எல்லை திறக்கப்பட்டுள்ளது.