பிரபல குத்துச்சண்டை ஜாம்பவன் ஜார்ஜ் ஃபோர்மேன் உலகிலிருந்து விடைபெற்றார்
அமெரிக்காவிலிருந்து உலகப்புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான ஜார்ஜ் ஃபோர்மேன் உலகிலிருந்து விடைபெற்றுக்கொண்டார். அவரது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை இரவு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செய்தியில் இதை அறிவித்துள்ளனர்.

1968ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஃபோர்மேன், 21 வருட இடைவெளியில் இரண்டு முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம், 45 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது குத்துச்சண்டை வீரரான பெருமை பெற்றவரானார்.
1974ஆம் ஆண்டு நடந்த புகழ்பெற்ற “ரம்பிள் இன் தி ஜங்கிள்” போட்டியில் முகமது அலியிடம் இவர் தோல்வி அடைந்திருந்தாலும் கூட, தனது தொழில்முறை குத்துச்சண்டை வாழ்க்கையில் 76 வெற்றிகளையும் அதில் 68 நாக்அவுட்கள் பெற்றும் சாதனை படைத்தார்.
1997ஆம் ஆண்டு விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஃபோர்மேன், தனது வாழ்க்கையின் இறுதிவரை பலருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.