துருக்கியின் எதிர்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்..!
துருக்கியின் எதிர்கட்சி தலைவர் எக்ரிம் இமாமொக்லு கைது செய்யப்பட்டதை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.லட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.கடந்த புதன் கிழமை இவர் கைது செய்யப்பட்டதுடன் ,பயங்கரவாத செயற்படாடுகளில் ஈடுப்பட்டதாக தெரிவித்து வழக்குபதிவு செய்துள்ளனர்.குறிப்பாக குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாக தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் இவரின் கல்லூரி பட்டப்படிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

இவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எண்ணியிருந்த நிலையில் அவரின் பட்டப்படிப்பு இரத்து செய்யப்பட்டிருக்கின்றமையால் ,தேர்தலில் போட்டியிட தகுதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கினறமை குறிப்பிடத்தக்கது.