கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஜனாதிபதி மாளிகை மீட்பு..!
சூடானில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஜனாதிபதி மாளிகை மீட்கப்பட்டுள்ளது.
சூடானில் இராணுவத்திற்கும் ஆர்.எஸ்.எப் துணை இராணுவத்தினருக்கும் இடையில் நீண்ட கால மோதல் நிலவி வந்த நிலையில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.80 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.

தலைநகர் கார்டும் உள்ளிட்ட பல நகரங்களை கிளர்ச்சியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் பல பகுதிகள் மீட்கப்பட்டன.எனினும் ஜனாதிபதி மாளிகை கிளர்ச்சியாளர்களின் வசம் இருந்த நிலையில் தற்போது கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஜனாதிபதி மாளிகை மீட்கப்பட்டுள்ளது.