இந்தியாசினிமாசெய்திகள்

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் காலமானார்

.

பிரபல தமிழ் இயக்குனர் பாரதிராஜாவின் மகன், நடிகர்-இயக்குனர் மனோஜ் பாரதிராஜா திடீர் மாரடைப்பால் உலகை விட்டுப் பிரிந்தார்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை 1999-ஆம் ஆண்டு தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்தார்.

இந்த படத்திற்குப் பிறகு, மனோஜ் சமுத்திரம், கடல் பூக்கள், ஈர நிலமஅன்னகோடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும், 2023-ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில், வீட்டில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், மனோஜ் பாரதிராஜா காலமானார். அவருடைய அகால மறைவு தமிழ் திரையுலகையும் அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *