பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி காலமானார்

புற்று நோய் பாதிப்பால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சியாளரான ஹுசைனி, சில திரைப்படங்களில் நடித்துள்ளதுடன் விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் பொக்சிங் கோச்சராகவும் நடித்திருந்தார்.
60 வயதான இவர் கடந்த 22 நாட்களாக வைத்தியசாலையில் தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில், நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஷிகான் ஹுசைனி ஏற்கனவே தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
