செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2025
கிழக்கிலங்கையில் மட்டுநகர் வாவிக்கும் வங்கக்கடலுக்குமிடையே வங்கக்கடலலைகள் தரைதடவி விளையாடும் அழகுடன் அமைந்த செட்டிபாளையம் எனும் பழம்பதியில் ஸ்ரீலஸ்ரீ சித்தி விநாயகர் எனும் நாமம் தாங்கி கைகூப்பும் அடியார்கள் வினைதீர்த்து கரையிலாக் கல்வியையும் குறையில்லா செல்வத்தையும் விக்கினங்களற்ற வீரிய வாழ்வினையும் கனிவுடன் அருள்பாலித்தருளும் எமது சித்திவிநாயகப் பெருமானுக்கு நிகழும் சர்வ மங்களகரமான குரோதி வருடம் பங்குனித்திங்கள் 17ம் நாள் (31.03.2025) திங்கட்கிழமை மாலை பூர்வாங்க கிரியை , சாந்தி கருமங்களுடன் ஆரம்பமாகி பங்குனித்திங்கள் 18ம் நாள் (01.04.2025) செவ்வாய்க்கிழமை மு.ப 8.00 மணி தொடக்கம் கிரியைகள் ஆரம்பமாகி பகல் 12.00 மணி அளவில் சதுர்த்தி திதியும், பரணி நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபவேளையில் கொடியேற்றம் நடைபெற்று 10 நாட்கள் திருவிழாவும் 11ம் நாள் சமுத்திர தீர்த்தம் இடம்பெறவுள்ளது.
