சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் நாட்டவர் கைது

ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் நாட்டவரை நேற்று கட்டுநாயக்க பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
20 முதல் 30 வயதுக்குட்பட்ட இவர்கள் பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்து, அங்கிருந்து பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வரிகை தந்துள்ளனர்.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட நபர்களை நாடு கடத்தப்படும் வரை வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.