O/L பரீட்சையின் பின்னர்: மாணவர்களினால் பாடசாலை செய்த நல்ல காரியம்

இன்றைய தினம் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை அடுத்து, இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் பரீட்சை மண்டபத்தை மேற்பார்வை செய்த ஆசிரியர் பெருந்தகைகளை வணங்கி விடை பெற்றனர்.
மாணவர்கள் பரீட்சையின் முடிவுக்குப் பிறகு, அவர்கள் கல்வி கற்ற பாடசாலையை மறவாமல், பாடசாலை சூழலை தூய்மைப்படுத்துவதற்காக சிரமமான பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக, பாடசாலையின் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்து, பாடசாலையை பேராலயம் என கருதி விழுந்து வணங்கினார்கள்.
இந்தச் செயல்பாடு, இளையவர்களுக்கு வழிகாட்டலாகவும், ஒழுக்க நெறிகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.



