இயக்கச்சியில் அழிக்கப்படும் பனைகள். கவனமெடுக்கத் தவறும் அதிகாரிகள்|மக்கள் ஆதங்கம்
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, இயக்கச்சி பகுதியில் உள்ள கண்ணகி அம்மன் கோயில் சுற்றுவட்டாரத்தில், இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்படுகின்றன.
சில காணி பகுதியை தமதாக்கிக் கொள்ளும் நோக்கில் இந்த அழிப்பை மேற்கொள்கிறார்கள் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தப்பகுதி பாலைவனமாகி வரும் நிலையில், பனை மரங்கள் மொத்தமாக அழிக்கப்படுவதால், சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
பனை அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும், இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அவல நிலை தொடராமல் தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்தப் பகுதியில் நேரடியாக பார்வையிட்டு, குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்கச்சி மக்கள் வலியுறுத்துகின்றனர்.