சம்மாந்துறையில் வீதியை விட்டு விலகி அதிகாலை விபத்துக்குள்ளான லொறி; ஒருவர் காயம்.!!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் ஆண்டியசந்திக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை (03) அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அம்பலாங்கொடை பகுதியில் இருந்து கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு மாளிகைக்காடு பகுதிக்கு வரும் போதே சாரதியின் தூக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி அருகில் உள்ள சுவரில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இவ்விபத்தில் 41 வயதுடைய சாரதி காயமடைந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.