குப்பைகளால் அசுத்தமடைந்த இங்கிலாந்து..!
இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நகரததில் குப்பைகள் சேர்ந்து வழிவதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம. கொடுத்துள்ளனர்.
துப்பரவு தொழிலாளர்கள் ஒரு மாதகாலமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பள பிரச்சினை மற்றும் பதவி விவகாரங்கள் என்பவற்றை முன்னிருத்தி குறிப்பிட்ட தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குப்பைகள் வீதிகளில் தேங்கி இருப்பதால் அப்பகுதிகளில் துர்நாற்றம் பரவி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செயல் காரணமாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டோர்மருக்கு அரசியல் ரீதியில் எதிர்பலைகள் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.