அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரியானது சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளது..!
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரியானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.எனினும் இந்த நிறுத்தம் சீனாவிற்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.சீனாவிற்கு விதிக்கப்பட் 20 வீத வரியுடன் மேலும் 34 வீத வரி விதிக்கப்பட்ட்து.
இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்க பொருட்களுக்கு34 வீத வரி விதித்தது.இதனை இரத்து செய்யாவிட்டால் மேலும் 50 வீத வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.எனினும் சீனா இரத்து செய்யவில்லை இதன் காரணமாக மேலும் 50 வீத வரி விதிக்கப்பட்டது.இதனையடுத்து சீனா பொருட்கள் மீதான வரி 104 வீதமாக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து அமெரிக்க பொருட்களுக்கு சீனா 50 சதவீத வரியினை விதித்தது.இதன் காரணமாக சீனாவின் வரி விதிப்பு 84 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.இந்ந நிலையிலேயே சீனாவிற்கு வரி நிறுத்தம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
