நிந்தவூர் பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…!! ஒருவர் காயம்….!!

நிந்தவூர் பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்ததுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் பலத்த சேதமடைந்துள்ளது.
நிந்தவூர் 24 ம் பிரிவு உள்வீதியில் இருந்து பிரதான வீதிக்கு நுழைந்த மோட்டார் சைக்கிள், அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் உடன் மோதியே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.