ஏமன் மீது இங்கிலாந்து வான்வழி தாக்குதல்..!
ஏமன் மீது இங்கிலாந்து வான்வழி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.ஏமனின் தலை நகர் சனாவில் இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் தயாரிப்பு ஆலையை குறிவைத்து இந்த தாக்குதலை இங்கிலாந்து மேற்கொண்டுள்ளது.இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் நடந்தனவா என்பது தொடர்பான எந்த விபரங்களும் வெளியாகவில்லை.

இஸ்ரேல் பாலஸ்தீன போரில் அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இஸ்ரேலிற்கு ஆதரவாக செயற்பட்டுவருகின்றன.ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன.இந்த நிலையிலேயே இங்கிலாந்து ஆனது ஏமன் மீது தாக்குதல் நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.