மே மாதம் முதல் வான்வெளி மூடப்படும்.-பாகிஸ்தான்..!
மே மாதம் முதல் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் வானவெளியின் குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை தினசரி மூட முடிவு செய்யப்பட்டுள்ளது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மே 01ம் திகதி முதல் மே 31ம் திகதி வரை அதிகாலை 4மணி முதல் காலை 8 மணிவரை தினமும் கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளி மூடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வர்த்தக விமான போக்குவரத்தில் பெரிய பாதிப்பு ஏற்படாது என பாகிஸ்தானின் விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.