பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் இவர் நியமனம்..!
ஐ.எஸ்.ஐ யின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முஹமது ஆசிம் மாலிக் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் இந்தியா போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ,போர் பதற்றம் ஏற்பட்டால் அதை எதிர் கொள்வதற்கான வியூகங்களை வகுப்பதற்கு உளவுப்பிரிவு அமைப்பு தலைவரின் வழிக்காட்டுதல் உதவும் என்ற அடிப்படையில் இந்த நியமனத்தை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் 10 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதே வேளை ஐ.எஸ்.ஐ தலைவராக பணியாற்றிவரும் ஒருவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஒரே நேரத்தில் இரு முக்கிய பொறுப்புகளை வகிப்பது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்