ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்..!
ஏமன் மீது இஸ்ரேல் நேற்று இரவு முதல் தாக்குதல் நடத்திவருகிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள ஹுடைடா நகர துறைமுகம்,சீமெந்து ஆலை என பல பகுதிகளில் தாக்குதல் நடத்திவருகின்றன. இதன் காரணமாக ஹுடைடா துறைமுகம் தீப்பற்றி எரிகின்றது.இந்த தாக்குதல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலானது 2 வருடங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்திவருகிறது. இந்த போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய அரபிக்கடல் ,செங்கடல் வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து ஹவுத்திகிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.