இரு நாடுகளும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்-சீனா..!
இந்தியா பாகிஸ்தான் போர் தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

“நாங்கள் இந்தியா பாகிஸ்தான் இரு தரப்பிலும் அமைதியும் ,சமாதானதும் ஏற்பட அதிக ஆர்வம் காட்டுகிறோம் .சர்வதேச சட்டங்கள் ஐ.நா சாசனம் அமைதி ஆகியவற்றை கருத்திற்கொண்டு இரு நாடுகளும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.நிலைமையை சிக்கலாக்கும் நடடிக்கைகளை தவிர்க்க வேண்டும் .தற்போதைய பதற்றங்களை தணிப்பதில் ஆக்கபூர்வ பங்களிப்பை வழங்க சர்வதே சமூகங்களுடன் இணைந்து செயலாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்”என்று தெரிவித்துள்ளார்.